This piece originally appeared in CNBC TV18 on February 20, 2020 in English, and in Chennai Online on March 18, 2020 in Tamil.

Mangalam Balasubramanian believes that in India, we are immersing ourselves in trash.

She has a point.

As the founder and managing trustee of Exnora Green Pammal, a women-founded and -operated waste management organization for the Pammal neighborhood of Chennai, India, Mangalam has committed her life to training and educating people, and particularly women, in sustainable practices for better living.

Recently we interviewed Mangalam in advance for our annual Greenbuild India conference in early February. She is a humble woman with a deep desire to improve the living standard of the people in India and around the world, and I feel a profound connection to her story. Being from Chennai, her work gives me hope for the future of my hometown. I know the streets she has transformed. I know the minds she has moulded and the lives she has changed — and because my family still lives there, I have a personal stake in her continuing this work. Managalam also reminds me of my own mother, who taught me, during an impoverished childhood, that sustainability is synonymous with survival.

But in addition to being a feminist, teacher, and advocate, Mangalam is, in my opinion, the specific type of historian we need in today’s India. Why? Because she’s giving context to climate change and she’s proving that green builders come in many forms.

To understand the future India is capable of building, we must first consider our past. Mangalam has a deep understanding of this nation’s history, as well as the patterns of human behavior. She points to The Stone Age of India, the Iron Age, and the Golden Age of the Gupta Dynasty as eras of progress within the building, materials, and economic sectors of this country. But when she speaks of today, she describes an era of stark contrast — one with excessive consumption and layers of garbage blanketing our neighborhoods.

In many ways, this is — quite literally — the Garb-Age. Today, 70 percent of India’s plastic isn’t recycled and makes up the towering landfills of trash, including New Delhi’s Ghazipur dump, which is approaching the height of the Taj Mahal. And we certainly can’t rely on regional pollution boards for transparency around plastic when we know that less than half of them often report the waste.

But we also know that the green building community in India is capable of combating the depletion of the country’s resources and the impacts of climate change with more precision and efficiency than nearly anywhere on Earth. Buildings account for more than one-quarter of all greenhouse gas emissions (GHGs), according to the Global Alliance for Buildings and Construction. Add in other infrastructure and activities, such as transportation, that are associated with buildings, and that number jumps.

By building green, we can significantly reduce the impact our buildings have on contributing to climate change while also building resilience into our homes and communities. According to a 2018 ANAROCK report, India ranks second only to the US in green technology projects and built-up area. While the India Green Building Council is less than two decades old, the report indicates that the Indian green building market is already expected to double, with upwards of 10 billion square feet by 2022.

Buildings have life cycles

Much like human beings, buildings themselves have life cycles. They go through construction, maintenance, and deconstruction. During these cycles, the sector emits 40 percent of global waste and more than a third of greenhouse gases.

But I believe that India can significantly reduce these numbers because we have already doubled our green building footprint and rank third in 2018’s top 10 regions and countries outside the US for LEED, and have more than 2,300 total registered LEED projects across the nation. Additionally, with Arc, the digital performance monitoring platform for LEED and other certifications, we have tracked to date, 12,053 metric tons of waste diverted from Indian landfills.

But India is also uniquely suited to fight climate change because, in addition to companies and local governments doubling down on their environmental commitments and certifications, our developing country is filled with individuals like Mangalam — unconventional types of green builders who understand that beyond the construction, maintenance, and deconstruction, a fourth building cycle exists, one that is enduring and inherent in everything we do: The human experience.

The Indian green building community has been and always will be one that champions both the power of individual and collective change — and more importantly one that fosters a culture where these distinct evolutions can and should overlap. We have people who are teachers. We have chefs. We have designers. We have CEOs and sustainability officers. And at this year’s Greenbuild India conference, we will envision a future with young and old alike, one with people who have different skills and career aspirations, but who share a common passion for building — building community, building relationships, building houses and workspaces, building and rebuilding lives, and most importantly building a lasting ideological and behavioral shift in how we approach the next decade and beyond.

Stewards for sustainability

We remember proudly the Stone, Iron, and Golden ages for their contributions, for their innovations and additions to our quality of life. So what if — instead of giving into this age of consumption, this Garb-Age — what if every one of us examines our personal strengths? Our varying backgrounds and interests? What if, in doing so, we are able to find unique and inspiring ways to become stewards for sustainability? And in doing so, we are better prepared to carry on that tradition of action, of accountability, and of our deeply ingrained desire to improve living standards for one another?

If we think like that — if we act with intent and compassion and we build on our personal strengths for the betterment of others — the future we want is within reach. Because if you look closely, the history of building in India is the history of life and longevity in India. The world can learn a lot from us, and if we define this new age by the wide-ranging and inclusive tenets of green building — and with that precious fourth cycle of the human experience — then we will be remembered far less for what we consumed and far more for what we created.

பருவமெய்தல்: இந்தியாவின் பசுமை கட்டிடச் சமூகம் எவ்வாறு மற்றும் ஏன் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தயாராகவுள்ளது?

இந்தியாவில் நாம் நம்மை குப்பைகளுக்கு மத்தியில் மூழ்கடித்துக்கொள்கிறோம் என்று மங்களம் பாலசுப்ரமணியன்; நம்புகிறார்.

மங்களத்தின் கூற்றில் அர்த்தம் உள்ளது.

இந்தியாவின், சென்னையில் உள்ள பம்மல் பகுதியைச் சேர்ந்த, எக்ஸ்னோரா கிரீன் பம்மல் என்னும் ஒரு பெண்களால்-நிறுவப்பட்ட மற்றும் இயக்கப்படும் கழிவு மேலாண்மை அமைப்பின் நிறுவனராகவும் மற்றும் மேலாண்மை அறங்காவலராகவும் திகழும் மங்களம் அவர்கள், தனது வாழ்நாள் முழுவதும், மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, சிறப்பான வாழ்க்கை முறைக்கான நிலைத்திருக்கத்தக்க வழக்கங்கள் குறித்து பயிற்சியளித்தல் மற்றும் கற்பித்தலை மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில், பிப்ரவரி மாதத்தின் துவக்கத்தில், எங்களது வருடாந்திர கிரீன்பில்ட் இந்தியா கருத்தரங்கிற்கு முன்னதாக நாங்கள் மங்களம் அவர்களை பேட்டி கண்டோம். மங்களம் அவர்கள், இந்தியாவிலும் மற்றும் உலகெங்கிலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றும் ஒரு ஆழமான ஆசை கொண்ட ஒரு அடக்கமான பெண்மணி ஆவார். அவர்களது கதையில் நான் ஒரு ஆழமான தொடர்பினை காண்கிறேன். சென்னையைச் சேர்ந்த எனக்கு, எனது பிறப்பிடத்தின் எதிர்காலத்தின் மீது அவரது பணிகள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. அவர்கள் மாற்றியுள்ள தெருக்கள் குறித்து நான் அறிவேன். அவர்கள் மாற்றியுள்ள மனங்கள் குறித்தும், அவர்களால் மாற்றப்பட்ட வாழ்வுகள் குறித்தும் எனக்குத் தெரியும் – காரணம், எனது குடும்பம் தற்போதும் அங்கு தான் வசிக்கின்றனர். அவர் தொடர்ந்து பணியாற்ற வேண்டுமென்பதில், எனது தனிப்பட்ட ஆர்வமும் உட்பட்டுள்ளது. மங்களம் எனக்கு எனது தாயை நினைவூட்டுகிறார். எனது பதின்ம பருவத்தில், நிலைத்திருத்தல் தன்மையே பிழைத்திருத்தலுக்கான வழி என அவர் எனக்கு கற்றுத்தந்துள்ளார்.

ஆனால், ஒரு பெண்ணியவாதியாகவும், ஆசிரியையாகவும் மற்றும் வழக்கறிஞராகவும் திகழ்வதற்குக் கூடுதலாக, என்னைப் பொறுத்தவரை மங்களம் அவர்கள் தற்காலத்து இந்தியாவிற்கு மிகவும் தேவைப்படும் ஒரு வகை வரலாற்று நிபுணராகவும் திகழ்கிறார். ஏன்? ஏனெனில், அவர் பருவநிலை மாற்றத்திற்கு சூழமைவை தருகிறார் மற்றும் பசுமை உருவாக்குனர்கள் பல வடிவங்களில் வரலாம் என்பதை நிரூபித்து வருகிறார்.

இந்தியா கட்டமைக்க சாத்தியம் கொண்டுள்ள எதிர்காலத்தை புரிந்துகொள்ள, முதலில் நாம் நமது வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டும். இந்த நாட்டின் வரலாறு மற்றும் மானுட நடத்தைகள் குறித்த ஆழமாக புரிதலை மங்களம் அவர்கள் கொண்டுள்ளார். நமது நாட்டின் கட்டிடங்கள், பொருட்கள் மற்றும் பொருளாதாரப் பிரிவுகளில் முன்னேற்றங்களை அவர், இந்தியாவின் கற்காலம்இ இரும்பு காலம் மற்றும் குப்தப் பேரரசின் பொற்காலம் என அடுக்குகிறார். ஆனால் தற்காலத்தைப் பற்றி பேசுகையில், இதை ஒரு  முற்றிலும் மாறுபட்ட சகாப்தமாக அவர் விவரிக்கிறார் – அதிகப்படியான பயன்பாடு மற்றும் சுற்றுப்புறங்களைச் சூழும் பல்அடுக்கு குப்பைகள் நிறைந்த சகாப்தம்.

பல வழிகளில், கிட்டதட்ட அப்படியே கூறு வேண்டுமெனில் – ஒரு கார்ப்-ஏஜ் ஆகும். இன்று, இந்தியாவின் 70 சதவிகித பிளாஸ்டிக்குகள் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. இதன் காரணமாக குப்பைக்கூளங்கள் விண்ணைமுட்டும் அளவிற்கு வளர்ந்துள்ளன. புதுடெல்லியின் காஜிபூர் குப்பை கூளத்தின் உயரம், தற்போது தாஜ்மகாலின் உயரத்தை எட்டி வருகிறது. மேலும், பிராந்திய மாசுகட்டுப்பாட்டு வாரியங்களிடமும், பிளாஸ்டிக் பயன்பாட்டில் நாம் வெளிப்படை தன்மையை எதிர்நோக்க முடியாது. காரணம் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்தவற்றில் பாதிக்கும் குறைவானதே கழிவுகளாக பெரும்பாலும் பதிவு செய்யப்படுகின்றன.

ஆனால், இந்தியாவின் பசுமை கட்டிடச் சமூகம், நாட்டின் ஆதாரங்களை அழித்தலை எதிர்த்தும் மற்றும் பருவநிலை தாக்கங்களை எதிர்கொள்ளும் வகையிலும், பூமியின் எந்தவொரு இடத்திலும் அதிக துல்லியத்தோடும் மற்றும் திறன்வாய்ந்த முறையிலும் செயலாற்றும் சாத்தியத்திறனைக் கொண்டுள்ளன.  கட்டிடங்கள் மற்றும் கட்டுமானத்திற்கான உலகளாவிய கூட்டமைப்பின் படி, உலகின் ஒட்டுமொத்த பசுமைக்குடியில் வளிம வெளிப்பாடுகளில் (GHGs) கட்டிடங்களின் பங்கு கால்வாசிக்கும் மேல் உள்ளது. இதில் பிற உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து போன்ற கட்டிடங்கள் சார்ந்த செயல்பாடுகளையும் சேர்த்தால், இந்த எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கவே செய்யும்.

பசுமை கட்டுமானத்தின் வழியாக, நமது கட்டிடங்களின் தாக்கத்தை மற்றும் பருநிலை மாற்றங்கள் மீதான பங்களிப்பை நம்மால் குறிப்பிடத்தக்க அளவு குறைக்க முடியும் மற்றும் நமது வீடுகள் மற்றும் சமூகங்களில் விரிதிறனை கட்டமைக்க முடியும். 2018 ANAROCK  அறிக்கையின் படி, பசுமை தொழில்நுட்ப திட்டங்கள் மற்றும் கட்டமைக்கப்பட்ட பகுதிகளின் அடிப்படையில், யு.எஸ்ஸிற்கு அடுத்து, இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்திய பசுமை கட்டடிடங்கள் கவுன்சில் இருபது ஆண்டுகளுக்கும் குறைவான செயல்பாட்டினையே கொண்டுள்ள போதிலும், இந்திய பசுமை கட்டிடச் சந்தை ஏற்கனவே இரண்டு மடங்காகி, 2022 – க்குள் 10 பில்லியன் சதுர அடிகளை எட்டும் என்று எதிர்நோக்கப்படுகிறது.

மனிதர்களைப்போல், கட்டிடங்களுக்கும் வாழ்க்கை சுழற்சிகள் உள்ளன. அவைகளும் கட்டுமானம், பராமரிப்பு மற்றும் கட்டுமானக்குலைப்பு போன்றவற்றைக் கொண்டுள்ளன. இச்சுழற்சிகளின் போது, இத்துறை, உலகளாவிய கழிவில் 40 சதவிகிதத்தையும் மற்றும் பசுமைக்குடியில் வளிமங்களில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேலாகவும் வெளியிடுகிறது.

நமது பசுமை கட்டிடங்கள் கால்தடத்தை நாம் ஏற்கனவே இரட்டிப்பாக்கியுள்ளதாலும் மற்றும் 2018 – ன், U.S – க்கு வெளியே அமைந்துள்ள முதல் 10 பிராந்தியங்களில் மூன்றாவது இடத்தை LEED – க்காக பிடித்துள்ளதாலும், தேசம் முழுவதும் மொத்தமான 2,300 – க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட LEED திட்டங்களைக் கொண்டுள்ளதாலும், இந்த எண்ணிக்கைகளை இந்தியாவால் குறிப்பிடத்தக்க அளவு குறைக்க முடியும் என்று நான் நம்புகிறேன். கூடுதலாக, ஆர்க் உடன், LEED – ன் டிஜிட்டல் செயல்திறன் கண்காணிப்பு அடித்தளம் மற்றும் பிற சான்றிதழ்கள் வழியாக, இன்றைய நாள் வரை, 12,053 மெட்ரிக் டன்கள் கழிவு, இந்தியாவில் நிலத்தில் நிரப்பப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது நமக்குத் தெரியவருகிறது.

மேலும், பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ள இந்தியா ஒரு தனித்துவமிக்க முறையிலும் ஏற்றதாகத் திகழ்கிறது. காரணம், தங்களது சுற்றுச்சூழல் உறுதிப்பாடுகள் மற்றும் சான்றிதழ்களை இரண்டு மடங்குகளாக்க நிறுவனங்கள் மற்றும் உள்ளுர் அரசுகள் முயற்சித்து வருவதற்குக் கூடுதலாக, மங்களம் – போன்ற வழக்கத்திற்கு மாறான தனித்துவமிக்க பசுமை உருவாக்குனர்கள் நமது நாடுகளில் நிறைந்துள்ளனர் மற்றும் அவர்கள், கட்டுமானம், பராமரிப்பு மற்றும் கட்டுமானக்குலைப்பு ஆகிய மூன்றுக்குக் கூடுதலாக, நான்காவது கட்டிடச் சுழற்சியான, நாம் மேற்கொள்ளும் அனைத்து விஷயங்களின் அடிப்படையாகத் திகழும் : மானுட அனுபவம் என்பதையும் அத்தகையோர் புரிந்துகொண்டுள்ளனர்.

இந்திய பசுமை கட்டிடச் சமூகத்தினர், தனிப்பட்ட மற்றும் மொத்த மாற்றங்கள் இரண்டின் ஆற்றல்களிலும் எப்போதும் வெற்றியாளர்களாகத் திகழ்கின்றனர் – மற்றும் மிக முக்கிளமாக, இத்தகைய மாறுபட்ட வளர்ச்சிகள், ஒன்றுக்கொன்று பிணையும் கலாச்சாரத்தையும் உருவாக்குகின்றனர். நம்மிடம் ஆசிரியர்களாகச் செயலாற்றுபவர்கள் உளள்னர் மற்றும் கலைஞர்களும், வடிவமைப்பாளர்களும் உள்ளனர். நம்மிடம் தலைமை செயல் அலுவலர்களும் மற்றும் நிலைத்திருத்தல் அலுவலர்களும் ஒன்றாக உள்ளனர். இந்த ஆண்டு, பசுமை கட்டிட இந்தியா கருத்தரங்கள், இளைஞர்களையும் மற்றும் வயதில் மூத்தோரையும் ஒருங்கே கொண்ட ஒரு எதிர்காலத்தை நம்மால் கற்பனை செய்ய முடிநதது. பல்வேறு திறன்கள் மற்றும் வாழ்க்கைத் தொழில்களைக் கொண்டுள்ள போதிலும், கட்டமைத்தல் மீதான பொதுவான பேரார்வம் – சமூகத்தைக் கட்டமைத்தல், உறவுகளை கட்டமைத்தல் மற்றும் பணியிடங்கள், கட்டிடங்கள் மற்றும் வாழ்க்கையை கட்டமைத்தல் ஆகியவற்றுடன், அனைத்திற்கும் மேலாக நாம் அடுத்த பத்து ஆண்டுகளையும் மற்றும் அதையும் கடந்த காலகட்டத்தையும் எவ்வாறு அணுகப் போகிறோம் என்பதை தீர்மானிக்கும் கொள்கைசார்ந்த மற்றும் நடத்தை சார்ந்த மாற்றங்களை நம்மால் கட்டமைக்க முடியும்.

நாம் கற்காலம், இரும்பு காலம் மற்றும் பொற்காலங்களை அவற்றின் பங்கிளப்புகளுக்காகவும், புத்தாக்கங்களுக்காகவும் மற்றும் நமது வாழ்க்கையில் அவைகள் மேற்கொண்டுள்ள தர மேம்பாடுகளுக்காகவும் பெருமையோடு நினைவுகூர்கிறோம். எனவே, நமது தற்காலத்து நுகர்வு கலாச்சார ஈடுபாட்டிற்கு மாற்றாக, இந்த கார்ப்-ஏஜில் நமது தனிப்பட்ட ஆற்றல்களை அனைவரும் பரிசீலித்தால் என்ன? நமது பல்வகைப்பட்ட பின்னணிகள் மற்றும் ஆர்வங்கள்? அவ்வாறு மேற்கொள்கையில், நமது பரந்துபட்ட பின்னணிகள் மற்றும் ஆர்வங்களின் பின்புலத்தில், நம்மால் தனித்துவமிக்க மற்றும் உத்வேகப்படுத்தும் வழிமுறைகளில், நிலைத்திருத்தலின் முன்னோடியாகச் செயலாற்ற முடிந்தால் என்ன? அவ்வாறு செய்கையில், நமது பொறுப்புடைமை சார்ந்த செயல்பாட்டுப் பாரம்பரியம் மற்றும் ஒவ்வொருவரது வாழ்க்கைத் தரங்களை மேம்படுத்தும் ஆழமான ஆசை ஆகியவைகள் இணைந்து பலனளிக்க நாம் சிறப்பான முறையில் தயாராகியுள்ளோமா?

நாம் இவ்வாறு சிந்திக்கையில் – அதே முனைப்பு மற்றும் பேரார்வத்துடன், நமது தனிப்பட்ட ஆற்றல்களை அடிப்படையாகக் கொண்டு, பிறரது மேம்பாட்டிற்கு – நாம் எதிர்நோக்கும் எதிர்காலம், நமது கைகளுக்கு எட்டும் தொலைவிலேயே உள்ளது. காரணம் நீங்கள் நெருக்கமாக பார்க்கையில், இந்திய கட்டிடங்களின் வரலாறு, வாழ்வின் வரலாறு மற்றும் நீடிப்புத்தன்மை ஆகியவைகள் ஒற்றைப் புள்ளியில் குவிந்துள்ளன. உலகம் நம்மிடமிருந்து அதிகம் கற்றலாம், நாம் இப்புதிய காலத்தை பரந்துபட்ட மற்றும் உட்பட்ட பசுமை கட்டிடங்களின் வழியாக – மானுட அனுபவம் என்னும் மதிப்பு மிக்க நான்காவது சுழற்சியோடு இணைக்கையில் – நாம் நிச்சயம் நுகர்தலுக்காக நினைவுகூறப்படுவதை விட, நம்மால் உருவாக்கப்பட்டவைகளுக்காக அதிகம் நினைவு கூறப்படுவோம்.